Friday, June 22, 2007

பயணக்குறிப்புகள் :)

முதல் மொக்கைக்கப்புறம் என்ன எழுதறதுன்னு முழிச்சிட்டுருந்தப்ப சமீபத்துல வாங்கின பல்பைப்பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணேன்! இது ஒரு வாரத்துக்கு முன்னாடி நடந்தது! நான் பாட்டுக்கு லீவுன்னாலும் வீட்டுக்கு போகாம நல்லப்பிள்ளையா காலேஜ்லயே படிச்சுட்டு (ஹி ஹி ஹி) இருந்தேன்! இருந்தாலும் place ஆனபிறகு வீட்டுக்கே போகலைன்னு ஒரு ஃபீலிங். எங்க வீடு இருக்கறது மதுராந்தகத்துல! (செங்கல்பட்டு பக்கம்). நான் படிக்கறது கோவைல! வீட்டுக்கு போகணும்னா சென்னை போற பேருந்துல ஏறி நடுவுல இறங்கணும். நம்ம அரசுப்பேருந்து கண்டக்டருங்க இருக்காங்களே! அவங்களுக்கு ஏதோ ஃபிளைட்ல கண்டக்டரா இருக்கறதா நினைப்பு! சீட் இருக்கான்னு தப்பித்தவறி கேட்டுட்டா போதும், ஏதோ பிச்சை கேட்ட மாதிரி பாப்பானுங்க! எவ்வளவோ முயற்சி பண்ணியும் எவனும் ஏத்த மாட்டேன்னு சொல்லிட்டாங்க! நான் வேற சும்மா இல்லாம என் கூட இன்னொருத்தனையும் கூட்டிட்டு வந்துட்டேன்! “பஸ் கிடைக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா? வாடா பாத்துக்கலாம்னு!” கூட்டிட்டு வந்தேன்! அவன் வேற கொலை வெறியோட பாத்துட்டு இருந்தான்!


அப்புறம் தட்டுத்தடுமாறி ஒரு தனியார் பேருந்துல இடம் கிடைச்சுது! ஆனா டிக்கெட் 375 ரூபாய்! வேற வழி இல்லாம வெயிட் பண்ணிட்டுருந்தோம்! அங்க எக்கச்சக்கமான சிட்டுக்குருவிங்க :) இருந்ததால ஏதோ நேரம் போனதே தெரியலை! ஆகா நம்ம பஸ்ல தான் வருவாங்கன்னு ஒரு நப்பாசையோட இருந்தேன்! ஆனா அங்கதான் விதி ஒரு பெரிய சதி செஞ்சுடுச்சு! திடீர்னு ஒரு பஸ் வந்தவுடனே எல்லாரும் ஏற ஆரம்பிச்சாங்க! சரி நாமும் ஏறலாம்னு எழுந்தேன்! அப்பத்தான் கூட வந்த நண்பன் சொன்னான்

“அது எர்ணாகுளம் போற வண்டிடா!”

“அதனால என்ன! நாம எர்ணாகுளம் போயிட்டு சென்னை போலாமே?”
“நான் ஏதாவது அசிங்கமா திட்டுறதுக்குள்ள வந்து உக்காந்துடு!”

நானும் பேசாம வந்து உக்காந்துட்டேன்! அப்பத்தான் பக்கத்துல ஒரு பிரகஸ்பதி பேசிட்டு இருந்தாரு “இந்த டிபார்டெட் படத்துல என்ன இருக்குன்னு அதுக்கு போய் நோபல் பரிசு கொடுத்தாங்க? பேசாம வேற ஏதாவது படத்துக்கு கொடுத்திருக்கலாம் சார்!” அடப்பாவிங்களா! சினிமாவுக்கெல்லாம் எப்படா நோபல் பரிசு கொடுக்க ஆரம்பிச்சாங்க? உங்க அலம்பலுக்கு ஒரு அளவே இல்லையாடா? இந்த மாதிரி ஆளுங்களோட என்ன பிரச்னைனா, இவிங்க பேசிக்கறதோட இல்லாம அக்கம்பக்கத்துல எவனாவது இருந்தான்னா அவனையும் உள்ள இழுப்பானுங்க! அதே மாதிரி இந்த ஆளும் சொல்லி முடிச்சுட்டு என்னைப்பார்த்து “என்ன தம்பி? நான் சொல்றது சரிதானே?” ன்னு கேட்டாரு. “நான் வேணும்னா அடுத்த தடவை கொடுக்கறத்துக்கு முன்னாடி உங்களை கேக்காம கொடுக்க வேணாம்னு சொல்லட்டுங்களாண்ணா?” ன்னு சொல்லலாம்னுதான் நினைச்சேன்! ஆனா உயிரோட ஊர் போய் சேரணும்ன்ற ஒரே காரணத்துக்காக பேசாம இருந்துட்டேன்! இப்படியே வெயிட் பண்ணிட்டுருந்தப்ப ஒரு வழியா நாங்க ஏற வேண்டிய வண்டி வந்துச்சு. வண்டி வேற பாக்கறதுக்கு கொஞ்சம் நல்லா இருந்துச்சு! சரின்னு நானும் என் கூட வந்தவனும் ஏறுனோம்


ஏறி உக்காந்தா எனக்கும் அவனுக்கும் வேற வேற இடத்துல சீட்! எனக்கு பக்கத்துல காட்டெருமை மாதிரி ஒருத்தன் வந்து உக்காந்தான்! எப்படியும் ஒரு 120 கிலோ இருப்பான்! அவன் தொபுகடீர்னு வந்து உக்காந்ததுல நான் கிட்டத்தட்ட கொஞ்ச தூரம் மேல பறந்துட்டேன்! ஒரு ஸீ ஸாவுல நீங்க ஒரு பக்கம் உக்காந்திருக்கும்போது இன்னொரு பக்கத்துல திடீர்னு ஒரு பாராங்கல்லை தூக்கி போட்டா எப்படி இருக்கும்? அந்த மாதிரி இருந்துச்சு! இதுல என்னை பாத்து
“தம்பி கொஞ்சம் தள்ளி உக்காருங்கன்னு” சொன்னான்!
“ஏங்க இதுக்கு மேல தள்ளி உக்காந்தா ஜன்னல் வழியா தொங்கிட்டு தாங்க வரணும்!”
இதுக்கு மேல விட்டு வைச்சா பிரச்னை ஆயிடும்னு பஸ்ல இருந்தவர்ட்ட சொல்லி என் நண்பனையே பக்கத்துல உக்கார வைச்சுகிட்டேன்! ஒரு வழியா வண்டி புறப்பட்டுச்சு.

ஆனா திடீர்னு வண்டி சென்னை போக வேண்டிய திசைக்கு எதிர் திசைல கேரளாவ நோக்கி போக ஆரம்பிச்சுடுச்சு! ஆகா சோலியை முடிச்சுட்டாங்கடான்னு யோசிச்சுட்டுருக்கும்போதே வண்டி ஒரு கிமீ போய் ரிவர்ஸ் எடுத்துச்சு! அடப்பாவிங்களா! ரிவர்ஸ் எடுக்கறதுக்கு இப்படி ஒரு அளப்பறையா? ஆரம்பமே அட்டகாசமா இருக்கே! நாளைக்கு ஊர் போய் சேர்ந்த மாதிரி தான்னு யோசிச்சிட்டுருந்தப்பவே திடீர்னு வண்டியை தாறுமாறா ஒட்ட ஆரம்பிச்சுட்டான்! நாளைக்கு உயிரோட ஊர் போய் சேர்ந்தா போதும்னு கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு படுத்துட்டேன்! புஷ் பேக் ஸீட்டை புஷ் பண்ணலாம்னு பண்ணா பின்னாடி இருக்கறவரு “தம்பி! தம்பி! என்ன பண்றீங்க? இப்படியெல்லாம் ஸீட்டை உடைக்காதீங்க!” ன்னாரு. “அங்கிள்! நான் இந்த பஸ்ல வந்ததுக்கு ஒரே காரணம் இந்த புஷ் பேக் தாங்க! அதுக்கும் ஆப்பு வச்சிடாதீங்க! வேணும்னா உங்களுக்கும் செஞ்சு தரேன்” னு சொல்லி எழுந்து போய் அவருக்கும் புஷ் பண்னி தந்துட்டு வந்து படுத்தேன்! எப்படியும் காலைல ஒரு 6 மணிக்கெல்லாம் போயிடுவான்னு படுத்துட்டேன்!

இங்க தான் விதி ஃபுட்பால் விளையாட ஆரம்பிச்சுடுச்சு. கோவைல இருந்து சென்னைக்கு போறதுக்கு ரெண்டு வழி இருக்கு! பெரும்பாலான வண்டிங்க சேலம், விழுப்புரம் வழியா சென்னை போகும்! கார்ல போறவங்கெல்லாம் ஓமலூர், வேலூர் வழியா சென்னை போவாங்க! பஸ்லாம் எப்பவும் முதல் ரூட் வழியா போகும். அப்படி போகும்போது மேல்மருவத்தூர் தாண்டி மதுராந்தகத்துல இறங்கிடலாம்.

நானும் அந்த வழியாதான் போவான்னு நம்பி உக்காந்துட்டேன். காலைல எழுந்திருக்கும்போது மணி ஆறு! அரக்க பரக்க சுத்தி முத்தி பேந்த பேந்த முழிச்சுகிட்டே எங்க இருக்கோம்னு பாத்தா ஒண்ணுமே விளங்கல! ஒரு வேளை தாம்பரம் தாண்டி போயிருப்பான்னோனு டிரைவர் கிட்ட போய் கேட்டா இப்பதாங்க வேலூர் வந்துருக்குன்னு சொன்னான்! தலைல இடி விழுந்த மாதிரி இருந்தது! இப்ப எங்க வூட்டுக்கு போகணும்னா நடுவுல இறங்கி ஒரு 3 மணி நேரம் பயணம் பண்ணணும்! வேற வழியில்லாம நொந்து நூடுல்ஸா போய் நடுவுல இறங்கி 3 பஸ் மாறி 11 மணிக்கு வீட்டுக்கு போய் சேர்ந்தேன்!

இந்த மேட்டரை வீட்டுல சொன்னா கெத்துக்கு குறைச்சல் வந்துடும்னு வண்டி பஞ்சர் அப்படி இப்படின்னு சமாளிச்சு ஒரு வழியா மேட்டர இத்தோட க்ளோஸ் பண்ணிட்டேன்!

இதுனால எல்லாருக்கும் நான் சொல்லிக்கிறது என்னன்னா, எப்ப வண்டி ஏறுனாலும் ரூட் விசாரிச்சுட்டு ஏறுங்க! அப்படியே இப்படி ஏதாவது பல்பு வாங்க நேர்ந்தாலும் கெத்தா தோள்ல இருக்க தூசியை துடைச்சிட்டு அப்படியே கெத்தை மெயிண்டைன் பண்ணிங்கங்க!

என்ன இருந்தாலும் ஆம்பிளைக்கு கெத்து தான சொத்து!!

வர்ட்டா!!

11 comments:

Chakravarthy said...

தலைவரே!!!
கமெடியில கலக்குறீங்க போங்க!!!
உண்மையாவே ரொம்ப சிரிச்சு படிச்சேன்!!
வாழ்த்துக்கள் CDK!! :-)))

Anonymous said...

adada...yaaru namba thambi dinesh ah ithu..ennama writing...adada...akkavuku grass itching...unga anna cvr ku aananda kanner....enga rendu peru peyarai nalla kaapathanum.sariya?

cdk said...

@ thurgah akka!!!

nandri nandri!!! unga pera kappatharathukkaga thana vanthirukken!! jamaichidalam kavalaippadatheenga!!!

cdk said...

@ chakravarthy!!!

romba nandri thalaiva!! thodarnthu padinga!!!

நாகை சிவா said...

//“அதனால என்ன! நாம எர்ணாகுளம் போயிட்டு சென்னை போலாமே?”//

இந்த தப்புக்கு தண்டனை தான் உங்கள மூனு மணி நேரம் சுத்த வச்சு இருக்கு....

//இங்க தான் விதி ஃபுட்பால் விளையாட ஆரம்பிச்சுடுச்சு.//

இதுக்கே அசந்தா எப்படி, சில சமயம் விதி கரண்ட் கம்பத்துல கட்டி வச்சு அடிக்கும், அதுக்கு தயார் ஆக இதை எல்லாம் அனுபவிச்சா தான் வேலைக்கு ஆகும்...

cdk said...

@ நாகை சிவா!!

ஆனாலும் ஒரே நேரத்துல ரெண்டு தடவை விதி விளையாடனது கொஞ்சம் பேஜாரா போச்சுப்பா!!

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!! தொடர்ந்து படிங்க!!

Dreamzz said...

சூப்ப்ர் பதிவு! very informational!

Dreamzz said...

//திருநெல்வேலி:

தாமிரபரணி ஆற்றினாலேயே திருநெல்வேலிக்கு இத்தகைய பெயர் ஏற்பட்டது. இப்பொழுது மிகவும் சிறியதாக ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி ஒரு காலத்தில் இலங்கை வரை பாய்ந்து கொண்டிருந்ததாக கிரேக்க பயணக்குறிப்புகள் சொல்கின்றன! அக்காலத்தில் கிரேக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் இலங்கையை ‘தாம்ரபர்ணே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில் திருநெல்வேலி இப்பொழுது இருந்த இடத்தில் நெல் பரவலாக பயிரிடப்பட்டிருந்தது. தாமிரபரணி நதியானது, நெல்லை வழியாக பாயும்பொழுது, பாசனத்துக்கு தண்ணீர் அளித்ததோடில்லாமல் ஆற்றின் கரைகளையும் பலப்படுத்திக்கொண்டே சென்றது! ஆகையால் எத்தகைய வெள்ளமும் அச்சீமையில் விளைந்திருக்கும் நெல்லை ஒன்றும் செய்ய முடியவில்லை. நெல்லுக்கு வேலியாய் இருப்பதினால் நெல்வேலி என்றும், அருள்மிகு நெல்லையப்பர் எழுந்தருளியுள்ளதனால் திரு என்ற அடையுடன் திருநெல்வேலி என்றும் பெயர் பெற்றது!
//

ஹிஹி!
இதுக்கு ஒரு கேள்வி.
நெல்லையப்பர் கோவின் வரலாறு படி..
ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன், நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பேர் வந்ததாக இருந்த்து :))

But your explanation sounds more reasonable. :D

Dreamzz said...

oops, commenta maathi ithukku pottuten. mela pottu irukanum:D

cdk said...

@ dreamzz

வாங்க! இந்த வரலாறை நான் இப்பதான் கேள்விப்படறேன்! தகவலுக்கு நன்றி!!

cdk said...

@ dreamzz

உங்க கருத்தையும் ஏற்றியாச்சு!!