Thursday, June 14, 2007

முதல் மொக்கை!!

எதையும் துவங்கும்முன் எல்லாம் வல்ல இறைவனுக்கு என் கோடானு கோடி நன்றிகள்!!! என் முதல் பதிவுக்கு வருகை தந்துள்ள நல்ல உள்ளங்களே! வருக வருக!! என்னதான் இங்கிலீசுலயே பீட்டர் விட்டு கதையா கதையா எழுதுனாலும் நம்ம தமிழ்ல எழுதற மாதிரி வருமா? அதான்! எப்படியாவது ஒரு தமிழ் பதிவு ஆரம்பிச்சுடனும்னு பகீரத பிராயத்தனம் பண்ணி, சீவீஆர் அண்ணணை படாத பாடு படுத்தி, ஒரு வழியா இங்க வந்து நிக்கறேன்! நான் இதை ஆரம்பிச்சது எதுக்குனா, வெட்டி மாங்கா போடறுதுக்கோ, வியாக்கியானம் பேசறதுக்கோ மட்டுமில்லை. அப்பப்ப என் மனசுல தோன்ற சிந்தைனங்கள உங்களோட பகிர்ந்துக்கறுத்துக்காகவும்தான். அதனால படிச்சவுடனே மறக்காம பின்னூட்டம் கொடுத்துட்டு போங்க!! மத்தபடி என்ன பத்தி சில வார்த்தைகள்!!

பேயர்: சிடிகே (எ) ச.தினேஷ் குமார்
வயது: இன்னும் யூத்து தான்!
பிடித்த சில வாக்கியங்கள்:

“தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!”

“கெத்து தான் ஆம்பிளைக்கு சொத்து!!”

காதலைப்பற்றி:

“நேற்று நீ சிரித்தாய்! இன்று அவள் சிரிப்பாள்! நாளை ஊரே சிரிக்கும்! ”

“காதல்ன்றது மழைல நனையற மாதிரி! நனையும்போது சந்தோஷம்! நனைஞ்ச பின்னாடி ஜலதோஷம்!!”

“காதல்ல விழுறதும் சேத்துல விழறதும் ஒண்ணுதான்! சேத்துல விழுந்தா டிரெஸ் காலி! காதல்ல விழுந்தா பர்ஸ் காலி!” (லவ் பண்றதுக்கு பொண்ணு கிடைக்க்லைன்னா இப்படி ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தான்!)

மத்தபடி எழுதறுத்துக்கு மானாவரியா மேட்டர் இருக்குது! அடுத்த பதிவுல சந்திக்கிறேன்!! வரட்டுமா!!!

12 comments:

CVR said...

மொத மொக்கையிலயே தத்துவங்களை புட்டு புட்டு வைத்திருக்கும் அண்ணன் சிடீகேயின் எழுத்துக்கள் இமயம் உள்ளவரை நிலைத்திருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
இப்படி பப்ளிக் பிலேசுல எல்லாம் என்ன அண்ணான்னு கூப்பிட்டா இந்த சொத்த பையனை எல்லாம் ஒருத்தன் அண்ணான்னு கூப்பிடரானேன்னு மக்கள் பொங்கி எழுந்துருவாய்ங்க!! (இங்க இருக்கறவனுங்க எல்லாம் பாசக்கார பயலுங்க!!)

அதனால கொஞ்சம் அடக்கி வாசிச்சிக்கோ!!
பதிவுலகுக்கு உங்களை வருக வருக என் வரவேற்கிறேன்!!
கலக்கு!! B-)

cdk said...

மிக்க நன்றி!!

மின்னுது மின்னல் said...

CVR said...
மொத மொக்கையிலயே தத்துவங்களை புட்டு புட்டு வைத்திருக்கும் அண்ணன் சிடீகேயின் எழுத்துக்கள் இமயம் உள்ளவரை நிலைத்திருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
//

ரிப்ப்ட்டேய்
Word Verification தூக்கவும்... :)

Anonymous said...

சிவிஆர் அண்ணாவா உங்களுக்கு?நடக்கட்டும் நடக்கட்டும்.எல்லாரும் ABCD தப்பு தப்பாக எழுதி பெயராக வைச்சு கிட்டீங்களா?அவர் CVR நீங்க CDK.சும்மா தமாசுக்கு....தப்பாக நினைக்கதீங்க

Anonymous said...

//இப்படி பப்ளிக் பிலேசுல எல்லாம் என்ன அண்ணான்னு கூப்பிட்டா இந்த சொத்த பையனை எல்லாம் ஒருத்தன் அண்ணான்னு கூப்பிடரானேன்னு மக்கள் பொங்கி எழுந்துருவாய்ங்க!! (இங்க இருக்கறவனுங்க எல்லாம் பாசக்கார பயலுங்க!!)
//

CDK உண்மையை நான் சொல்லுறேன்.அவரை எல்லாரும் தம்பின்னு கூப்பிடனும் என்று அவருக்கு ஆசை.நீங்க அண்ணான்னு கூப்பிட்டதும் மனுசன் tension ஆகிட்டார் :)


//அதனால கொஞ்சம் அடக்கி வாசிச்சிக்கோ!!
பதிவுலகுக்கு உங்களை வருக வருக என் வரவேற்கிறேன்!!
கலக்கு!! B-)
//

அடக்கம் எல்லாம் இங்கே வேண்டாம்.நன்றாக ஆட்டம் போடுங்க.இந்த சிவிஆர் கூட சேர வேண்டாம்.நம்ப கேங் பக்கம் வாங்க.நாங்கதான் மொக்கை பதிவுல எல்லாம் expert(பெருமையா சொல்லிகிறேன்).மேலும் எழுத வாழ்த்துக்கள் :))

cdk said...

@ மின்னுது மின்னல்! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

cdk said...

@ துர்கா அக்கா!

எப்பவுமே பெரிய மனுஷங்கள்லாம் அவிங்க பேரை மூணு எழுத்தாதான் வெச்சுப்பாங்க! உதாரணத்துக்கு சிடிகே, சிவீஆர், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி. கமல் னு சொல்லிட்டே போலாம்!

இது எப்படி இருக்கு? :)

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!!

gautham krishna said...

super da. sensational.

gautham krishna said...

super da. sensational.

cdk said...

@ gautham

thanx மச்சான்! எல்லாம் உன் ஆசிர்வாதம்! :)

நாமக்கல் சிபி said...

:)

வாங்க! வாங்க! வாழ்த்துக்கள்!

லொடுக்கு said...

வாங்க! அடிச்சு ஆடுங்க!!