Thursday, August 9, 2007

கூவம் நதிக்கரையிலே

கடைசியா பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சே! உருப்படியா ஒரு பதிவு போட்டா என்னன்னு ஒரு எண்ணம்! மறுபடியும் வரலாறு பத்தியே எழுதலாம்னு முடிவு பண்ணி எதை பத்தி எழுதறதுன்னு யோசிச்சிட்டுருந்தப்ப சென்னை பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணேன். சென்னைன்னு சொன்னவுடனே நம்ம ஞாபகத்துக்கு வர்றது கூவம் தானே!

இதுக்கு மேல ஒரு நதியை அழுக்காக்க முடியாதுன்றதுக்கு சிறந்த உதாரணம் கூவம்! கூவத்தோட வரலாற்றைப் பாத்தோம்னா “எப்படி இருந்த கூவம் இப்படி ஆகிடுச்சுன்னு” கண்டிப்பா வருத்தப்படாம இருக்க மாட்டோம்! இப்ப அது இருக்கற நிலைமையிலே நதிக்குள்ள தான் குதிக்க முடியாது! அதோட வரலாறுலயாவது குதிப்போம் வாங்க!

கூவத்தைப் பத்தி வரலாற்றுக்குறிப்புகள் ஏராளமாக குவிந்து கிடக்குது! 1640 ஆம் ஆண்டு கிளைவ் டே எனும் ஆங்கிலேயத் தளபதியின் கீழ் வந்த வர்த்தகக் குழுவினர் முதன் முதலாக தரையிறங்கிய இடம் கூவம் நதிக்கரைலதான்! வெளி வாணிபத்துக்கு கடல் வழியாகவும், உள் வாணிபத்துக்கு நதி வழியாகவும் பயணம் செய்ய சுலபமா இருக்கும்ன்றத்துக்காக அவங்க தேர்ந்தெடுத்த இடம் கூவம். அவங்க வாணிபத்துக்காக கட்டின கோட்டை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை. இதை பத்தி விரிவா இன்னொரு பதிவுல எழுதியிருக்கேன்.

அப்ப கூவம் நதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு பக்கத்துல ஓடிட்டிருந்துதாம். பின்னாடி கோட்டை விரிவாக்கத்துக்காக அதோட ஒடுபாதையை மாத்தி புதுசா கால்வாய் வெட்டினாங்க! அப்ப ஆரம்பிச்சதுதான்! இன்னிக்கு வரைக்கும் கூவத்துக்கு தொடர்ந்து ஆப்பு வெச்சுகிட்டேதான் இருக்காங்க!

கூவம் ஏன் இப்படி ஆச்சுன்னு பாத்தா ஒரு விநோதமான வேற்றுமை கிடைக்கும்! சென்னையில இருந்து 70 கிமீ தள்ளி கூவம்ன்ற பேர்ல ஒரு கிராமம் இருக்காம். தொடர்ச்சியா 75 குளம் இருக்குற இந்த கிராமத்துல இருக்கிற ஒரு ஏரி தான் கூவத்துக்கு பிறந்த இடம் என்கிறார்கள். முன்னாடி கூவம் நல்லா சீரும் சிறப்புமா ஓடி சென்னையோட தண்ணீர் தாகத்தை தீர்த்துட்டு இருந்துச்சாம்.

ஒரு காலத்துல சென்னையோட தண்ணீர் தேவையை தீர்க்கிறத்துக்காக கூவத்துக்கு நடுவுல கேசவரம்னு ஒரு அணையை கட்டி அங்கிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு எடுத்திட்டு போயிட்டாங்க. சுற்று சூழல் கெட்டு போகாம இருக்கிறத்துக்காக ஒவ்வொரு நதியிலையும் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஓடுணம்னு ஒரு சட்டமே இருக்கு. அதை எல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்காம இப்படி திருப்பி விட்டது தான் கூவத்துக்கு ஒரு பெரிய ஆப்பா அமைஞ்சுடுச்சுன்னு சொல்றாங்க!

பச்சையப்பன் கல்லூரி நிறுவனர் திரு பச்சையப்பன் முதலியார் வாழ்க்கையைப்பத்தின ஆவணங்கள்ல கூவம் பத்தி நிறைய செய்தி இருக்கு! தினமும் காலையில் பச்சையப்பன் முதலியார் கூவத்துல குளிச்சுட்டு பக்கத்துல இருக்குற ஆலயத்துல கோயில்ல வழிபடுவார்னு அவரோட டைரிக்குறிப்புகள்ல எழுதியிருக்கு! இப்ப கூட கூவத்துல குளிக்கறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை!! என்ன, குளிச்ச பிறகு அவர் எழுதுன மாதிரி டைரி எழுதறத்துக்கு தான் ஆள் இருக்கமாட்டாங்க!

நம்ம முன்னாடி பாத்த மாதிரி கூவத்துக்கு நீர் வரத்து குறைய ஆரம்பிச்சதிலிருந்து கூவம் டேமேஜ் ஆக ஆரம்பிச்சிடுச்சு! சென்னையோட மக்கள் தொகை 70 லட்சம். இவிங்க அத்தனை பேரோட கழிவு தாங்கியாக கூவம் மாறிடுச்சு!

இன்னைக்கு சென்னையில குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் ஒரு சரியான நதி இல்லாததுதான்றது பலரோட கருத்து! கையில தர்பூசணி வெச்சிகிட்டு செர்ரி பழத்துக்கு அலையுற மாதிரி (அடடடா என்ன உவமை! என்ன உவமை!) கூவத்தை டேமேஜ் பண்ணிட்டு தண்ணிக்காக வீராணம் வரைக்கும் பைப் போடறாங்க! இனிமேலாவது கூவத்தோட பாதைல இருக்கிற ஆக்கிரமுப்புகளை எல்லாம் அகற்றினாலாவது கூவம் ஓரளவுக்கு சரியாகுதான்னு பாப்போம்!


முடிக்கும் போது ஒரு பஞ்சோட முடிக்க வேணாமா! கூவம் ன்ற வார்த்தைக்கு “தூய ஊற்று நீர்”னு அர்த்தமாம்!! என்ன கொடுமை சரவணன் இது!!!

22 comments:

Anonymous said...

கூவம் ன்ற வார்த்தைக்கு “தூய ஊற்று நீர்”னு அர்த்தமாம்!!


:O nejemaaava namba mudiyalai.. appadinaa neengha sonnadhu saridhaan enna kodumai sirr

CVR said...

கலக்கற போ!!
ரொம்ப நல்ல நடை!!
நகைச்சுவையாவும் இருக்கு ,நிறைய தகவல்களும் இருக்கு!!!
மேலும் மேலும் நிறைய எழுதுங்க சீ.டீ.கே!!
வாழ்த்துக்கள்!! :-)

இராம்/Raam said...

அட கூவத்தை பத்தி இம்புட்டு இருக்கா???

Dreamzz said...

//சென்னையில குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் ஒரு சரியான நதி இல்லாததுதான்றது பலரோட கருத்து! கையில தர்பூசணி வெச்சிகிட்டு செர்ரி பழத்துக்கு அலையுற மாதிரி//
நான் தான் பர்ஸ்ட்டா?

Dreamzz said...

நல்லா ஆராய்ச்சி பன்னி எழுதி இருக்கீங்க!!

நாமக்கல் சிபி said...

//முடிக்கும் போது ஒரு பஞ்சோட முடிக்க வேணாமா! கூவம் ன்ற வார்த்தைக்கு “தூய ஊற்று நீர்”னு அர்த்தமாம்!! என்ன கொடுமை சரவணன் இது!!! //

சூப்பர் பஞ்ச்!

Dreamzz said...

keep writing such good topics!

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு சிவிஆர்!

தொடர்ந்து இதே மாதிரி நிறைய போடுங்கள்.

அடையாறு ஆல மரம்!

குசும்பன் said...

முன்னாடி கூவம் நல்லா சீரும் சிறப்புமா ஓடி சென்னையோட தண்ணீர் தாகத்தை தீர்த்துட்டு இருந்துச்சாம்.

:(
:(
:(

வவ்வால் said...

இதே போன்ற கூவம் கட்டுரை ஒன்றை சில நாட்களுக்கும் முன்னரும் பார்த்த நிஐவு, பின்னுட்டம் கூட போட்டேன் இது எதுவும் மீள்பதிவா?

கூவம் சுத்தம் செய்ய 2000 கோடி தேவை என்று ஏதோ ஒரு கணக்கு சொல்கிறார்கள் தற்போது அரசு அதெல்லாம் செய்யுமா.சாஇபாபாவிடம் கூட உதவிக்கு கேட்டுப்பார்த்தார்கள்.

கரையோரம் இருக்கும் குடிசைகளை அப்புறபடுத்தாமல் அங்கே எதுவும் செய்ய முடியாது அதுவே மண்டையிடி தான், அப்பறம் எங்கே கூவம் சுத்தம் ஆவாது.

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கூவத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டது என்று அம்மையார் கடப்பாறை சகிதம் போனார்கள் என்னாச்சோ தெரியல வசூல் ஆகி இருக்கும் போல அப்படியே விட்டுடாங்க.இப்படி ஆக்ரமிப்பளும் கழிவுகளும் தான் கூவம் மணக்க காரணம்.

என் கிட்டே கூட கூவத்தை அதிகம் செலவில்லாம சுத்தம் செய்ய ஒரு திட்டம் இருக்கு, அதை பிறகு சொள்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அழகான பதிவு! அந்தக் காலக் கூவம் போல! :-)))

//இப்ப கூட கூவத்துல குளிக்கறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை!! என்ன, குளிச்ச பிறகு அவர் எழுதுன மாதிரி டைரி எழுதறத்துக்கு தான் ஆள் இருக்கமாட்டாங்க//

ஏங்க...டைரி எழுத வேண்டிய கறுப்பு இங்கைக் கூட கூவத்திலேயே எடுத்துக் கொள்ளலாமே! :-))

அப்புறம் இவ்ளோ சொன்ன நீங்க கூவம் மறுச் சீரமைப்பு பற்றிய அண்மைக் கால முயற்சிகளைச் சொல்லி இருக்கலாம்! எக்ஸ்னோரா திட்டம் உட்பட....

அடுத்த ஆறு அடையாறா?

ILA (a) இளா said...

அடடா, நல்ல கருத்து/விவரத்தோட ஆரம்பிச்சு இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இப்ப கூட கூவத்துல குளிக்கறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை!! என்ன, குளிச்ச பிறகு அவர் எழுதுன மாதிரி டைரி எழுதறத்துக்கு தான் ஆள் இருக்கமாட்டாங்க!//


உள்ளே உள்ள விபரீதத்தை ,இங்கிதமாகக் கேலி செய்துள்ளீர். இந்த நதிபற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். குறிப்பாக ''சோ''வின் தலைப்பல்லவா?? ஜக்குவும் அந்தச் சென்னைத் தமிழும் மறக்க முடியாதது.
கூவம்= தூய ஊற்று நீர் , இது தமிழ்ச் சொல் தானா???

CVR said...

@நாமக்கல் சிபி
//நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு சிவிஆர்!//
ஐயோ தல!!
இதை எழுதினது சீ.டீ.கே!!

நான் இல்ல!! :-)

cdk said...

@ cvr

ரொம்ப நன்றி சிவீஆர்!!

தொடர்ந்து படிங்க!!

cdk said...

@ dreamzz

நல்லா ஆராய்ச்சி பன்னி எழுதி இருக்கீங்க!!

இதுல ஏதாவது உள்குத்து இருக்குதா??

cdk said...

@ நாமக்கல் சிபி!!

என் பெயர் சிடீகே பாஸ்!!

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!

cdk said...

@ குசும்பன்

உங்க ஃபீலிங்கஸ் எனக்கும் புரியுது!! என்ன பண்றது?? காலம் அப்படி ஆயிடுச்சு!!

cdk said...

@ வவ்வால்

இப்பதான் முதல் தடவை எழுதுறேன்!!

உங்க ஐடியாவை சொல்லுங்க!! நல்லா இருந்துச்சுனா சீஎம் ஆக்கிடறோம்!!

cdk said...

@ krs

கூவம் மறுசீரமைப்பு பத்தி ஒரு தனி பதிவே போடலாம். என்னன்னவோ முயற்சி பண்ணி பாத்துட்டாங்க! ஒண்ணும் வேலைக்காகலை! நடுவுல இருக்குற ஆக்கிரமுப்புகளை அகற்றுகிற வரைக்கும் ஒண்ணும் பண்ண முடியாது பாஸ்!!

cdk said...

@ இளா

ரொம்ப நன்றி பாஸ்!!

தொடர்ந்து படிங்க!!

cdk said...

@ johan paris

கூவம்ன்றது அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட தமிழ்ச்சொல் தான்!!