Tuesday, July 10, 2007

நாங்களும் எட்டு போட்டுட்டோம்ல!!

என் இனிய தமிழ் மக்களே!! (சும்மா ஒரு பாரதிராஜா எஃபெக்ட் கொடுக்கலாம்னுதான்). சிவனேனு கிடந்த என்னை எட்டுப்பதிவு போட சொல்லி கோர்த்து விட்டுட்டாரு நம்ம சிவீஆர் அண்ண்ன்! அது என்ன பெரிய கம்ப சாஸ்திரமா? நாமும் ஒரு கை பார்க்கலாம்னு துணிஞ்சு இறங்கி ஒரு சில எட்டுப் பதிவை படிச்சேன்! நம்ம பத்தி பெருமையான எட்டு விஷயங்கள சொல்ல்னுமாமே? முதல் பால்லயே கிளீன் போல்ட் ஆக்கிட்டாங்களேப்பா!! ‘ஏன் பிறந்தாய் மகனே’ ன்னு வீட்ல பாடிட்டு இருக்கும்போது நான் பாட்டுக்கு “நான் வல்லவன்! நல்லவன்! நாளும் தெரிஞ்சவன்! நாகரிகம் அறிஞ்சவன்”னு கதை விட்டேன்னு வெச்சுக்கங்க, வலைப்பதிவுன்னு கூட பாக்காம நிறைய பேர் கல்லை விட்டு அடிச்சுருவாங்க!

ஆனா நம்மளையும் ஒரு மனுஷனா மதிச்சு எழுத சொன்னதுக்காக ஏதாவது எழுத வேண்டாமா? சின்ன வயசுல இருந்தே கிறுக்குத்தனமா பல காரியம் பண்ணியிருக்கேன் அதுல ஒரு எட்டை (பத்தாது தான்!) இங்க எடுத்து விடுறேன்! இப்பவே சொல்லிட்டேன், பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!!

1. அப்ப நான் ரெண்டாப்பு படிச்சுட்டிருந்தேன்! (ஒரு கொசுவத்தி சுருளை எடுத்து மூஞ்சிக்கு நேரா சுத்திக்கோங்க! அப்பதான் ஃபிளாஷ் பேக் எஃபக்ட் வரும்!). காஞ்சிபுரத்தில படிச்சுட்டுருந்தேன்! ஒரு தடவை ஸ்கூல்ல ஆதரவற்றோர் பள்ளிக்காக துணி எல்லாம் சேகரிச்சுட்டு இருந்தாங்க! நானும் துணி எல்லாம் கொடுத்தேன்! அடுத்த நாள் தான் துணி எல்லாம் கொண்டு போறேன்னு சொல்லிருந்தாங்க! அடுத்த நாள் ஸ்கூலுக்கு போகும்போது வழில ஒரு மஞ்சள் ரோஜா பூத்திருந்துச்சு! சரி துணிகளோட சேர்த்து இதையும் கொடுத்தா நல்லா இருக்குமேன்னு கொண்டு போய் எங்க கிளாஸ் டீச்சர்ட்ட கொடுத்தேன்!
அவிங்க என்னடான்னா நான் அதை அவங்களுக்கு தான் கொடுக்கிறேன்னு நினைச்சுட்டு “ச்ச்சோ ஸ்வீட்” னு என் கன்னத்தை கிள்ளிட்டு அதை அவங்க தலைல வெச்சுகிட்டாங்க! நானும் ஹிஹிஹி னு வழிஞ்சுகிட்டே வந்து உக்காந்துட்டேன்! அப்ப மட்டும் நான் வழிஞ்ச வழிசலை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு திருப்பி விட்டுருந்தாங்கன்னா முப்போகம் விளைஞ்சிருக்கும்!

2. எங்க ஸ்கூல்ல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பல போட்டி வெப்பாங்க! அதுல பேச்சுப்போட்டி, கவிதை கட்டுரைன்னு எல்லாத்துலயம் நம்ம தான் கிங்! இத நம்பி ஒரு தடவை எங்க தமிழ் மிஸ் ஒரு டிராமா போட சொல்லி கோத்துவுட்டுட்டாங்க! அப்ப நான் ஏழாவது படிச்சுட்டிருந்தேன்! நானும் என் நண்பணும் மண்டையை பிச்சுகிட்டு ரெண்டு நாள் கழிச்சு ஒரு கதை ரெடி பண்ணோம்! கதைன்னா சாதாரண கதை இல்ல! ஷங்கர் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமா ஊழலை ஒழிக்கணும், லஞ்சத்தை அழிக்கணும்னு செம கான்செப்ட்! மேடைல கார் சேஸிங் ஸீன் எல்லாம் பிளான் பண்ணி வெச்சிருந்தோம்னா பாத்துக்கோங்க! ஸ்கிரிப்ட் எழுதி எங்க மேடம் கிட்ட கொடுத்தா அவிங்க மயக்கமே போட்டுட்டாங்க!

"தம்பிகளா நான் ஸ்டேஜ்ல போடுறதுக்கு கதை கேட்டேன்பா! நீங்க ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதை ரெடி பண்ணிருக்கீங்க?"

"அப்ப இதை போட முடியாதுங்களா மேடம்?"

"இவ்வள்வு நேரம் என்ன தெலுங்குலயா சொல்லிட்டிருந்தேன்?" ன்னு எங்க முதல் கதைக்கே ஆப்பு வெச்சுட்டாங்க! இன்னும் ரெண்டு நாள்தான் இருக்குன்னு கட்டபொம்மன் டிராமா போடலாம்னு முடிவு பண்ணி என்னை கட்டபொம்மனாகவும் போட்டுட்டாங்க! எங்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா, ஒரு சில நேரம் ஓவர் ஆக்டிங் பண்ணிடுவேன்!

அதே மாதிரி தான் அன்னைக்கு ஜாக்சன் துரை கிட்ட பேசும்போது


"டேய் துரை!
யாருகிட்ட கேக்குற திறை
நாய்க்கு போடுறது பொறை
நான் அடிச்சா உன் வாய்ல வரும் நுரை"
ன்னு டிஆர் ரேஞ்சுக்கு பேசிபுட்டேன்! எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்ப்ச்சுட்டாங்க! எங்க மேடத்துக்கு செம கோபம்! எனக்கும் ஒரு மாதிரி ஆயிடுச்சு! எப்படியாவது விட்ட பேரை திரும்பி வாங்கணம்னு முடிவு பண்ணி அப்புறமா மாவட்ட சுகாதார நிர்வாகம் நடத்துன ஒரு போட்டில மலேரியாவை பத்தி ஒரு நாடகம் போட்டு கலெக்டர் கையால மேடத்தை பரிசு வாங்க வெச்சோம்!

3. +2 முடிச்ச பிறகு ஐஐடி எண்ட்ரன்ஸ்க்கு அப்ளை பண்ணிருந்தேன்! (சும்மா ஒரு டைம் பாசுக்குத்தான்). நான் வீட்டுல வெட்டியா உக்காந்திட்டிருந்ததை பாத்து டவுட் ஆகிட்டாங்க! பிரிலிம்ஸ்கு ஒரு ரெண்டு நாள் இருக்கும்போது எப்பப்ப எந்த எக்ஸாம்னு கேட்டாங்க! நானும் சொன்னேன்! அப்புறமா ஹால் டிக்கெட் வாங்கி பாத்தவுடனே கடுப்பாயிட்டாங்க! ஏன்னா நான் பிரிலிம்ஸ் எக்ஸாம்கு பதில் மெயின் எக்ஸாம் டைம்டேபிள் சொல்லிட்டேன்! "பிரிலிம்ஸ்கும் மெயின்ஸ்குமே உனக்கு வித்தியாசம் தெரியலை! நீ எல்லாம் எக்ஸாம் எழுதி என்ன சாதிக்கப்போற? பேசாம வீட்டுலய உக்காரு" ன்னுடாங்க! நானும் ஐஐடி கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு ஃபிரியா விட்டுட்டேன்!

4) ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்கும்போது தமிழ்ல பேசக்கூடாதுன்னு ஒரே கெடுபிடி! அதுவும் ஒரு மேடத்துக்கு என் மேல செம காண்டு! எப்ப பாத்தாலும் தமிழ்ல பேசிட்டான்னு கோத்து விட்டுடும்! பழி வாங்கறதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்போ ஒரு சான்ஸ் கிடைச்சுது! எங்க ஸ்கூல்ல டீச்சர்ஸ் டே அப்ப நாங்க தான் போய் சின்ன பசங்களுக்கு கிளாஸ் எடுக்கணும். இது தான் சான்ஸ்னு அந்த மேடம் கிளாஸுக்கு போனேன்! அங்க ஒரு பையனை எழுப்பி பா பா பிளாக் ஷீப் பாட்டு பாட சொன்னேன்! அவனும் எழுந்து சொன்னான்! இனிமே அப்படி சொல்லக்கூடாதுன்னு தமிழ்ல சொல்லி குடுத்துட்டேன்! தமிழ்ல எப்படின்னா

"செம்றி ஆடே செம்றி ஆடே கம்ப்ளி கீதா?
கீது மச்சி கீது மச்சி மூணு மூட்டை"
னு செம லோக்கலா இருக்கும்! நான் சொல்லி கொடுத்து முடிச்சவுடனே கரெக்டா அந்த மேடம் உள்ளே வந்துட்டாங்க! அப்புறம் என்ன? எப்பவும் போலவே அர்ச்சனை தான்!

5) ஒரு தடவை நானும் என் பிரண்ட்ஸும் வீட்டுகு வெளில நிந்து பேசிக்கிட்டிருந்தோம்! அப்ப பாத்து எங்க டியூஷன்ல படிக்கிற பொண்ணுங்க போனாங்க! நான் பாட்டுக்கு சும்மா இல்லாம பிரெண்டோட வண்டியை எடுத்துகிட்டு செம ஸ்பீட்ல ஒவர் டேக் பண்ணி டக்குனு அடுத்த தெருவுல கட் பண்ணேன்! அப்பன்னு பாத்து எவனோ படுபாவி ஒரு செங்கலை போட்டு வெச்சிருந்திருக்கான்! டமால்னு கீழே விழுந்ததோட இல்லாம வண்டியும் கரெக்டா என் மேலயே விழுந்துடுச்சு! நல்ல வேளையா அந்த பொண்னுங்க வேற வழில போய்ட்டதால இந்த கூத்தை பாக்கலை! நானும் மீசைல மண் ஒட்டாத வரைக்கும் சந்தோஷம்னு அப்படியே திரும்பி வந்துட்டேன்!

6) நாட்டு நலப்பணித்திட்டத்தில நிறைய கேம்ப் அட்டெண்ட் பண்ணிருக்கேன்! ஒரு தடவை வீடு வீடா போய் பிரச்சாரம் பண்ண சொன்னாங்க! நாங்களும் சரின்னு போய் பண்ணிட்டிருந்தோம்! ஒரு வீட்ல வயசான அம்மா ஒருத்தங்க இருந்தாங்க! அவிங்க கிட்ட போய் "பாட்டி நாங்க நாட்டு நலப்பணித் திட்டதில இருந்து வரோம்" னு சொன்னது தான் தாமதம், அசிங்க அசிங்கமா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க! பாவம் அவிங்க யார் மேல என்ன கொலை வெறில இருந்தாங்களோ? விட்டா போதும்னு அடிச்சு ஓடி வந்துட்டோம்!

7) கேம்ப்ல சும்மா சுத்திகிட்டிருக்கும்போது என் பிரெண்டஸ் எல்லாம் அங்க இருக்கிற சின்ன பசங்களை கூப்பிட்டு என்னை காமிச்சு "அண்ணன் நல்லவரு! வல்லவரு! நாளும் தெரிஞ்சவரு"ன்னு சொல்ற மாதிரி பக்காவா டிரெயினிங் கொடுத்துட்டாங்க! சரி நம்மளை பத்தி பெருமையாத்தானே பேசுறாங்கன்னு நானும் கண்டுக்காம விட்டுட்டேன்! 'தீப்பொறி தினேஷ்'னு பட்டம் வேற கொடுத்துட்டாங்க! ஒரு நாள் பட்டி மன்றம் பேச என்னை கூப்பிட்டு இருந்தாங்க! அந்த ஊரே கூடி இருந்தது! மைக் முன்னாடி நிந்தவுடனே அங்க இருந்த பசங்க எல்லாம் கோரஸா "அண்ணன் நல்லவரு! வல்லவரு! நாளும் தெரிஞ்சவரு! அண்ணன் தீப்பொறி தினேஷ் வாழ்க!"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டானுக! அடப்பாவிகளா இதுக்கு தான் இவ்வளவு டிரெயினிங்கா? ஊரே சிரிச்சுட்டிருந்துது! இருந்தாலும் "உங்கள் பேராதரவுக்கு நன்றி" ன்னு சமாளிச்சு ஒரு வழியா பேசி முடிச்சுட்டேன்!
8) பட்டி மன்றத்துல எப்பவும் முதல்ல பேசறவுங்க பாடு ரொம்ப திண்டாட்டம்! எல்லாமே சொந்த கருத்தா சொல்லனும்! அந்த பட்டி மன்றத்துல நான் தான் முதல்ல பேசணும்! எனக்கு அப்புறம் பேசுன யாருமே எதுவும் தயார் பண்ணலை போலிருக்கு! பொண்ணுங்க முதற்கொண்டு எல்லாரும் நான் பேசுனதை வைச்சு என்னை காய்ச்சி எடுத்துட்டாங்க! பட்டிமன்றம் முடிச்சு கீழே வந்தவுடனே ஒரு பையன் வந்து "திப்பொறி அண்ணா! பட்டி மன்றத்துல ஏன் எல்லாரும் உங்களையே கிழிச்சாங்க"ன்னு கேட்டான்! எல்லாரும் வுழுந்து வுழுந்து சிரிச்சிட்டாங்க! ஒரு வழியா சமாளிச்சிட்டு வந்துட்டேன்!


இதோட என் எட்டு பதிவை நிறைவு செய்திக்கிறேன்! இதுனால நான் சொல்லிகிறது என்னன்னா, தொபுகடீர்னு கீழே விழுந்தாலும், மீசைல மண்ணு ஒட்டலைன்னு சந்தோஷமா கிளம்பி போய்ட்டே இருங்க!

வர்ட்டா?

10 comments:

CVR said...

//“நான் வல்லவன்! நல்லவன்! நாளும் தெரிஞ்சவன்! நாகரிகம் அறிஞ்சவன்”னு கதை விட்டேன்னு வெச்சுக்கங்க, வலைப்பதிவுன்னு கூட பாக்காம நிறைய பேர் கல்லை விட்டு அடிச்சுருவாங்க!
//
கவலை படாத!! மானிட்டரு தடுத்துடும்!!
அந்த நம்பிக்கைலதானே நாங்க எல்லாம் எழுதிட்டு இருக்கோம்!! :-P

//மேடைல கார் சேஸிங் ஸீன் எல்லாம் பிளான் பண்ணி வெச்சிருந்தோம்னா பாத்துக்கோங்க! //
நடத்து நடத்து!!! தமிழ் சினிமாவுக்கு அடுத்த மணிரத்னம் நீதான்னு சொல்லு!!! :-D

//"டேய் துரை!
யாருகிட்ட கேக்குற திறை
நாய்க்கு போடுறது பொறை
நான் அடிச்சா உன் வாய்ல வரும் நுரை" ன்னு டிஆர் ரேஞ்சுக்கு பேசிபுட்டேன்//
தம்பி!!
ஓவரா டீ.ஆர் படம் பாக்காதன்னு படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டியா?? :-D

//"செம்றி ஆடே செம்றி ஆடே கம்ப்ளி கீதா?
கீது மச்சி கீது மச்சி மூணு மூட்டை"னு செம லோக்கலா இருக்கும்//
இது Ulti!! B-)

//சொன்னது தான் தாமதம், அசிங்க அசிங்கமா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க! பாவம் அவிங்க யார் மேல என்ன கொலை வெறில இருந்தாங்களோ? //
சமீப காலமாகவே மக்கள்ஸ் எல்லார் கிட்டேயும் கொலை வெறி கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு!!! :-)

//இதோட என் எட்டு பதிவை நிறைவு செய்திக்கிறேன்! இதுனால நான் சொல்லிகிறது என்னன்னா, தொபுகடீர்னு கீழே விழுந்தாலும், மீசைல மண்ணு ஒட்டலைன்னு சந்தோஷமா கிளம்பி போய்ட்டே இருங்க!
//
சூப்பரு பதிவு போ!!
கலக்கு!! :-))))

நல்லா எழுதியிருக்க தம்பி!!
வாழ்த்துக்கள்!! :-)

G.Ragavan said...

:) எட்டும் எட்டும் ஒன்று...உன்னோட பதிவென்று ஒன்று :)

நல்லா எழுதீருக்கப்பா. கலக்கல். என்னுடைய பாராட்டுகள்.

தீப்பொறின்னாலே கிழிக்கனும்னு தெரியாதா! :))))))))))))))

Anonymous said...

I enjoyed it very much. Lots of comedy. Keep posting.

Ravi

Dreamzz said...

நல்லா எழுதி இருக்கீங்க டீட்டெய்லு!

Dreamzz said...

தீப்பொறி தினேஷா! பேரு நல்லா இருக்கே!

Dreamzz said...

//"செம்றி ஆடே செம்றி ஆடே கம்ப்ளி கீதா?
கீது மச்சி கீது மச்சி மூணு மூட்டை"/

ஹி ஹி! நல்லா காமெடியா இருக்கு!

cdk said...

@ cvr!

thanx boss
sorry tamilla type panna mudiala inga!!

cdk said...

@ ragavan

thanx boss!! theepori matter innum neraya iruku!! nithanama solren!!

cdk said...

thanx ravi

cdk said...

@ dreamzzz

thanx birathar