Tuesday, November 20, 2007

அழுகிய தமிழ்மகன் - விமர்சனம்!


இப்படி கூட ஒரு படம் எடுக்க முடியுமா? னு நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பொதுவா விஜய் படத்தை பார்க்கக்கூடாதுன்னு ஒரு கொள்கை உண்டு எனக்கு. அன்னைக்கு ஓசி சோறு (அதாங்க treat) போடுறாங்கன்னு வந்தவனை அப்படியே பார்சல் பண்ணி தியேட்டருக்கு கூட்டிட்டு போய்ட்டானுங்க பாவிப்பசங்க!! சரி பாட்டெல்லாம் கேக்கறதுக்கு நல்லா இருந்துச்சே, அதையாவது ரசிப்போமேன்னு போனேன்!

டைட்டில்ல டைரக்டர் பேர் பரதன் ன்றதை Bhharathhhhhhan ன்னு போட்டப்பவே மனசுக்குள்ள ஒரு அலாரம் அடிச்சுது! இருந்தாலும் தைரியமா உக்காந்திருந்தேன்! படத்துல விஜய் ஒரு ஓடுகாலி! அதாவது ஓட்டப்பந்தய வீரர். இப்ப இந்த படம் தியேட்டரை விட்டு தியேட்டர் ஓடுற வேகத்துக்கு ஓடுவார்னா பார்த்துக்கோங்க! அவர் ஓடுனா தோத்துடுவோமுன்னு பயப்படுற ஒரு சக ஓடுகாலி, அவரை தீர்த்து கட்டுறதுக்காக ரோட்டுக்கு நடுவுல ஒரு கயிறு கட்டிவிடுறான். நம்ம ஹீரோ பைக்ல காத்தை கிழிச்சிகிட்டு (இந்த படத்துல என்ன கிழிச்சேன்னு யாராவது கேள்வி கேட்டா பதில் சொல்லனுமில்ல!) வர்றார். நம்ம ஹீரோ எவ்ளோ பெரிய தில்லாலங்கடின்னா, அந்த கயித்து மேல உக்காந்துகிட்டிருக்கிற பட்டாம்பூச்சியை பார்த்து வீலீங் பண்ணி சதியை முறியடிக்கிறாராம்! நோட் பண்ணுங்கடா! நோட் பண்ணுங்கடா! அதுக்கப்புறம் வழக்கம்போல ஒரு ஃபைட் ஒரு பாட்டு!

பாட்டுல பார்த்தீங்கன்னா, விஜய் கூட ரேஸ் ஓட்டுறவங்க, வக்கீல், டாக்டர், கடற்படை வீரர்கள் ன்னு நிறைய பேர் ஆடுறானுங்க! விட்டா ராணுவ தளபதி, ஜனாதிபதியெல்லாம் வந்து ஆடுவாங்க போல இருக்கு!

ஏ.ஆர் ரகுமான் ஏண்டா இந்த படத்துக்கெல்லாம் இசையமைச்சோம்னு ஃபீல் பண்ணி கதறி கதறி அழதுட்டிருக்கிறாரம். அந்த அளவுக்கு பாட்டு எல்லாத்தையும் கொதறி வெச்சிருக்கானுங்க!

படத்தோட நாயகி ஸ்ரேயா! சென்ஸார்னு ஒண்ணு இருக்கேன்ற ஒரே கரிசனத்துல தான் துணி போட்டிருக்காங்க போல இருக்கு! அந்த அளவுக்கு துணி பஞ்சம். எல்லா படத்துல வர்ற அரைலூசு ஹீரோயின் மாதிரி தான் இவங்களும். ஹீரோ தியாகம் பண்றதை பார்த்து காதல்ல தொபுகடீர்னு விழுந்துற்றாங்க! ஏண்டா டேய், அது எப்படி கரெக்டா ஹீரோயின்னுக்கு கேக்குற மாதிரியே இடம் பார்த்து போய் பேசுறீங்க!

அப்படியே கதை போய்க்கிட்டு இருக்கும்போதுதான் தெரியுது, விஜய் ஒரு தமிழகத்து நாஸ்ட்ரடாமஸ்னு! அவருக்கு extra sensory perception இருக்குதாம்! அதாவது எதிர்காலத்தை இப்பவே தெரிஞ்சுக்கிற பவர். நீங்க உங்க மனசுக்குள்ளே கெட்ட வார்த்தையால திட்டுறது புரியுது! அப்ப நேர்ல பார்த்த நாங்க எவ்வளவு திட்டியிருப்போம்னு பார்த்துக்கோங்க!

இதுக்கு மேல அந்த கதையைப்பத்தி நான் சொல்ல மாட்டேன்! ஏன்னா சொல்றதுக்கு கதைன்னு ஓண்ணுமில்ல!

அதுக்கப்புறம் ரெண்டாவது விஜய் எண்ட்ரி. ரெண்டு விஜய்க்கும் ஸ்டைல்தான் வித்தியாசமாம். டேய் குருவி மண்டையா! நீ எதை ஸ்டைல்னு சொல்றன்னே புரியலையேடா!

படத்தோட ஹைலைட் என்னன்னா படத்துல நமீதா வர்றாங்க! நம்ஸ்! உன் முகம் குழந்தைத்தனமா இருக்கு! அதுக்குன்னு குழந்தைங்க போடுற டிரெஸ்தான் போடுவேன்னு அடம்பிடிச்சா என்ன அர்த்தம்! இங்க ஒண்ணு சொல்லியே ஆகணும்! நம்ஸோட அப்பா சூரத்துல துணி வியாபாரம் பண்றாராம்! என்ன கொடுமை சரவணன் இது! (சிவீஆர் அண்ணா! உங்க தலைவியை பத்தி ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுடுங்க!)

ஷகிலா எதுக்கு படத்துல வர்றாங்கன்னே புரியலை! அப்புறம் இந்த சாயாஜி ஷிண்டே! அஜக்கு மாதிரியே பேசிட்டு திரியுறாரு!

கிளைமாக்ஸ்ல ஒரு கொடுமை! இது வரைக்கும் விஜய் தான் டயலாக் பேசி வில்லனை திருத்துவார். இந்த படத்துல ஹீரோயின் டயலாக் பேசி திருத்துறாங்க! இன்னொரு கொடுமை என்னன்னா டைட்டில்ல இதய தளபதி, டாக்டர் விஜய்னு போடும்போது நம்மால வாந்தி எடுக்காம இருக்க முடியலை! எப்படி வேணும்னாலும் படம் எடுக்கலாம்! நம்ம கேக்குறதுக்கு ஆள் இல்லைன்ற தைரியத்துல படம் எடுத்திருக்காங்க டைரக்டரும் ஹீரோவும்!

ஆக மொத்ததில் அழகிய தமிழ்மகன், அழுகிய வாழைப்பழத்தை சாப்பிட்ட மாதிரி இருக்கு!!

13 comments:

Anonymous said...

உனக்கு ஏன் இந்த விஷ பரீட்சை தம்பி?படம் ஆரம்பிச்சவுடனே ஓடி வந்து இருக்கனும்.ஆர்வ கோளாறனினால் அந்த கொடுமை எல்லாம் பார்த்துட்டு விமர்சனம் வேறையா??

theevu said...

எத்தனை தமிழ்படம் பார்த்திருக்கோம்.இதை மட்டும் பாக்கமாட்டோமா என்ன? :)

cdk said...

@ துர்கா!!

அப்படி என்னதான் சொல்ல வர்றாங்கன்னு தெரிஞ்சிக்கனும்ன்ற ஆர்வத்தால வந்த வினை!!

cdk said...

@ theevu

ஆகா!! கிளம்பிட்டீங்களா!! இந்த மேட்டரை சொல்ல மறந்துட்டனே!!

Anonymous said...

இந்த நாய் விஜய், பத்திரிக்கை காரங்களுக்கு பணம் கொடுத்து இந்த படத்தை சூப்பர் ன்னு விமரிசனம் எழுத வைத்திருக்கிறான்

cdk said...

அது தெரிஞ்ச விஷயம் தானே!!

CVR said...

டேய்!!!
நான் பாட்டுக்கு சிவனேன்னு ஓரத்துல கெடக்கேன்!!!
என்னை ஏண்டா இப்படி இழுத்து விடறீங்க?? :-P

Anonymous said...

இன்னொரு கொடுமை என்னன்னா டைட்டில்ல இதய தளபதி, டாக்டர் விஜய்னு போடும்போது நம்மால வாந்தி எடுக்காம இருக்க முடியலை

டாக்டர் விஜய்கிட்ட காட்டியிருந்தீங்கன்னா, உடனே சரி பண்ணியிருப்பாருல்ல!!

cdk said...

@CVR

என்ன அண்ணா பண்றது? உங்க பேரை போட்டாத்தான் உன் பதிவை படிப்போம்னு உங்க ரசிகைகள் ஒரே அன்புத்தொல்லை! அதான் இப்படி!

cdk said...

@ வீர சுந்தர்

டாக்டர் விஜய்யை சினிமாவுல பாத்ததுக்கே இந்த எபெஃக்ட்! நேர்ல பார்த்திருந்தா நான் காலி!!

Dreamzz said...

நான் ஒன்னும் சொல்லல! எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க!!

Veera said...

கொஞ்சம் இந்த சந்தேகத்த தீர்த்து வைங்க!!

gautham said...

scene.review padichitu poyirkalam. sonna kettiya.. :P